போத்தனூர் கடை வீதி சாலையில் இறைச்சி கழிவு!!

      -MMH


      மாநகராட்சி அலட்சியம்! கோவை மாவட்டம் போத்தனூர் கடைவீதி பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் இன்று மாலை குப்பை எடுத்துச் சென்ற வாகனம் ஒன்று கோழி இறைச்சிகளை ஏற்றிச்  சென்றபோது போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் அருகிலும் செட்டிபாளையம் ரோடு ஈஸ்வர் நகர் அருகில்  அருள்முருகன் நகர் பகுதியிலும் கோழி கழிவுகளை ரோட்டில் அலட்சியமாக கொட்டி சென்றது தெரியவந்துள்ளது.


        இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழும் அபாயமும் மற்றும் அந்த பகுதிகளில் அதிகப்படியான வாகனம் செல்வதால் அந்தக் கழிவு மீது ஏறிச் சென்றால் துர்நாற்றமும் வீசும் அளவிற்கு அந்த இறைச்சி கழிவுகளை மாநகராட்சி சிறிய வண்டியில் கொண்டு சென்றுள்ளது. இதுபோன்ற தவறுகளை அடிக்கடி நடக்குமாறு அங்குள்ள பொதுமக்கள் கூறுகின்றனர். இதுபோன்ற குப்பை எடுத்துச் செல்லும் வாகனம் சரிவர குப்பையைக் கொண்டு போகாததால் ஆங்காங்கே ரோடுகளில் குப்பைகள் கிடைக்கின்றன.



     இதை கவனத்தில் கொண்டு மாநகராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொள்கிறார்கள்.


-ஈஷா,கோவை.


Comments