பொள்ளாச்சி அருகே மஞ்சு தொழில் சாலையால் மக்கள் அவதி!!

     -MMH


           பொள்ளாச்சி அடுத்த வஞ்சியபுரம் பகுதிக்கு உட்பட்ட அருட்செல்வபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மஞ்சி மில் உள்ளது.இந்த தொழிற்சாலையில் மஞ்சு உற்பத்தி செய்த பிறகு அதிலிருந்து பிரிக்கப்படும் மஞ்சி துகள்களை அருகே உள்ள 10 ஏக்கர் நிலப்பரப்பில் உலர வைக்கப்படுகிறது.


     இந்த மஞ்சு துகள்கள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து
விழுவதால்  இப்பகுதி முழுவதும் மாசு ஏற்பட்டு வருவதாக இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.மேலும் இந்த மஞ்சு துகள்கள் குடிநீர், சமைத்து வைத்த உணவுப் பொருட்கள், பால், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில்  படிந்து வருவதால்  பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.            ஒரு சில நேரங்களில் காற்று அதிகமாக அடிக்கும் பொழுது காற்றில் துகள்கள் கலந்து வருவதால் மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் உடலில் ஏற்படுவதாகவும்,வீட்டில் அனைத்துப் பகுதிகளிலும் துகள்கள் படிந்து வருவதால் சுத்தப்படுத்தும் வேலை அதிகமாக உள்ளதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாவதாக இப்பகுதியில் உள்ள பெண்கள் கூறுகின்றனர்.            இதனால் பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவிக்கும் இந்த தொழிற்சாலையை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments