உப்பு கலந்த வெது வெதுப்பான தண்ணீரின் நன்மைகள்!!

     -MMH


     உப்பு கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பதனால் நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு


     வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து குடிப்பதால் உடலுக்கு அத்தியாவசியமான நீரோட்டத்திற்கு உதவுவதோடு உடல் வறட்சியையும் தடுக்கின்றது.


     வெதுவெதுப்பான உப்பு நீரில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.


     இந்த தண்ணீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடலை நோய் தொற்றுக்கள் தாக்கும் அபாயத்தை குறைக்கிறது.


     உப்புத் தண்ணீர் குடிப்பதனால் நாம் சாப்பிடும் உணவை நமது உடலுக்கு ஆற்றலாக செயல்படத் தூண்டும்.மன அழுத்தத்தை குறைப்பதற்கு வெதுவெதுப்பான உப்பு கலந்த தண்ணீரை குடிப்பது நல்லது. இரவில் உப்பு கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பதனால் மன அழுத்தம் நீங்கி மன அமைதியுடன் நன்றாக உறங்க முடியும்.


எப்போது குடிக்கலாம்..?


     உப்பு தண்ணீரை குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் சரியான முறையில் குடிப்பது நல்லது. சில ஆய்வுகளின் அடிப்படையில் இரவு தூங்குவதற்கு முன்பு உப்பு கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்த தண்ணீரை குடிப்பதால் உடலில் வளர்சிதை மாற்றமடைய ஏற்ற நேரமாக அமைகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த உப்பு தண்ணீரை குடிப்பது நல்லது.


எச்சரிக்கை:


தண்ணீரில் அளவுக்கு அதிகமாக உப்பை கலந்து விடக் கூடாது. அவ்வாறு அதிக உப்பு சேர்த்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.


இயற்கையான உப்பை பயன்படுத்துவது நல்லது பதப்படுத்தப்பட்ட டேபிள் உப்பை பயன்படுத்தினால் ஆரோக்கியக் கேடுகள் ஏற்படும்.


உப்பு நீர் குடிப்பதால் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை தவிர்க்க வேண்டும்.


உப்பு சம்பந்தமான ஆரோக்கிய பிரச்சனைகள் கொண்டவர்கள் உப்புத் தண்ணீரைக் குடிக்கக் கூடாது.


-சுரேந்தர்,கோவை கிழக்கு.


Comments