கொரோனா ஊரண்டங்காள் மக்களை தேடிச்செலும் குரங்குகள்!!

     -MMH


              பொள்ளாச்சி ஆழியார் என்றாலே அருவிக்கு அடுத்து நம் நினைவிற்கு வருவது அட்டகாசம் செய்யும் குரங்குகள், பொள்ளாச்சி மக்களின் சுற்றுலா தலமான, ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் தரும் உணவுகளை உண்டு ருசி கண்ட குரங்குகள் தப்போது கோரோனோ ஊரடங்கால் வெறிச்சோடி இருக்கும் பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் மக்கள் தரும் உணவுக்காக குரங்குகள் காத்து இருக்கின்றன, நீண்ட நாட்கள் ஆகியும் கண்ணில் தென்படாத மக்களை காண அழையா விருந்தாளியாக ஊருக்குள் சென்று குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது.



             இதனால் பெருதும் அவதி அடையும் பொள்ளாச்சி சுற்று வட்டார மக்கள் பொள்ளாச்சி வனதுறைக்கு குரங்குகளை பிடித்து சென்று ஆழியார் வனப்பகுதில் விட கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சில சமூக ஆர்வலர்கள் கூறுகையில் வனப்பகுதியை மட்டுமே உணவிற்காகவும், வாழ்விடத்திற்க்காகவும் சார்ந்து வாழும் குரங்குகள் மக்களை தேடி ஊருக்குள் புகுவதற்கு மக்களே காரணம் என்றும், சுற்றுலாவிற்கு செல்லும் இடங்களில் குரங்குகளுக்கு மனிதர்களின் உணவை, நாம் உட்கொள்ள கொடுப்பதால் அவை நம் உணவிற்கு அடிமை ஆகி விட்டதாகவும் வனப்பகுதிக்குள் சென்று தனக்கான உணவை தேட வேண்டும் என்பதையே முற்றிலும் மறந்து காடு சார்ந்த வாழ்க்கையை விட்டு மனிதனை சார்ந்த வாழ்க்கைக்கு குரங்குகள் மாறிவிட்டன.



             இதற்கு சற்று சிந்தித்து பார்த்தால் இத்தகைய மாற்றத்திற்கு மக்கள் ஆகிய நாம் நடவடிக்கையை காரணம் என்பதே கசப்பான உண்மையாக இருக்கும் என்றும், இதனால் தான் குரங்குகள் நகருக்குள் உலாவரும் நிலை எற்பட்டு உள்ளது என்பதை நாம் உணர்ந்து இனி வரும் காலங்களில் நாம் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல் பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments