திருஷ்டி பூசணிக்காய்கள் சாலைகளிலா.. உடைப்பது..❓

     -MMH


திருஷ்டி பூசணிக்காய்கள் சாலைகளிலா உடைப்பது! 


     திருப்பூர்:ஆயுத பூஜையின் போது வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றிற்கு பூஜைகள் செய்து, திருஷ்டி பூசணிக்காய்கள் உடைக்கப்படுவது வழக்கம். ரோடுகளில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் திருஷ்டி பூசணிக்காய்களை உடைக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.திருப்பூரின் பல பகுதிகளில், ரோட்டிலேயே பலர், திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்தனர். டூ வீலரில் சென்றவர்கள் சிலர், அதன் மீது அறியாமல் வாகனத்தை இயக்கவே, வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்தனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.


Comments