கோவையில் சோகம்! - ஒலிபெருக்கி காணவில்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை..!
-MMH
ஒலிபெருக்கிக் குழாயைக் காணவில்லை.தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ டிரைவர்!
கொரோனா பிரச்சார ஆட்டோவில் இருந்து ஒலிப்பெருக்கி காணமல் போனதால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுப்ரமணியன் (52). கடந்த சில மாதங்களாக கோவை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக அவரது ஆட்டோவை கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக ஓட்டி வந்துள்ளார். கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக கோவை மாநகராட்சி சார்பில் ஒலிப்பெருக்கிகள் மற்றும் அதற்கு தேவையான சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஆட்டோவில் மாட்டியிருந்த மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட ஒலிப்பெருக்கி மற்றும் அதற்கு தேவையான சாதனங்கள் திருடு போய் உள்ளன. இதனால் மன உளைச்சலுடன் இருந்த அவர் அதிக அளவு மது அருத்திவிட்டு வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி புஷ்பா அளித்த புகாரின் பேரில் பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருதத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தில் இருந்து ஒலிப்பெருக்கி சாதனங்கள் தொலைந்து போனதன் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-Ln. இந்திராதேவி முருகேசன், கோவை.
Comments