நம் எண்ணம் தான் நம் வாழ்க்கை!!

     -MMH 


     நாம் ஒன்றை பற்றி தொடர்ந்து நினைத்தால்,  அதை உறுதியாக நம்பபினால் அது  நிச்சயமா நடக்கும்.  அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். இது ஒரு பிரபஞ்ச விதி என்கிறார்கள்.



இதற்கு உதாரணமாய் வெற்றி பெற்றவர்கள் பலரின் அனுபவத்தை முன் வைக்கின்றனர் உளவியலாளர்கள். கூடைப்பந்து மேதை 'மைக்கேல் ஜோர்டான்', உடலை இரண்டு முறை முழுமையாக 720 டிகிரி திருப்பி, பின்பு பந்தை கூடைக்குள் செலுத்தி போடுவார். அவர் கையில் பந்து போய் விட்டது என்றால் அது கூடைக்குதான். பல நாட்களாக இந்த காட்சியை மனத்திரையில் கற்பனை செய்து பார்த்தது தான் அவரது அபார விளையாட்டின் ரகசியமாக இருந்தது.
கோல்ப் விளையாட்டில் உலகில் முதல் இடத்தில் இருக்கும் டைகர் வுட்ஸ் என்பவரும்  இந்த உத்தியை பயன்படுத்துவதாகத்தான் சொல்லப்படுகிறது.  தான் அடிக்கும் எங்கே போய் எந்த குழியில் விழ வேண்டுமோ அதில் விழுவதாக அவர் அடிக்கடி கற்பனை செய்வாராம். 


ஆக, நம் எண்ணம் தான் நம் வாழ்க்கை..


இதில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டியது.. யார் மீதாவது கோபப்பட்டுக் கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்கள் மீது யாராவது கோபப்படுவார்கள், எப்போதும் பலரை வெறுத்து கொண்டே இருந்தீர்கள் என்றால் நீங்கள் வெறுக்கப்ப்படுவீர்கள். நீங்கள் எல்லோரும் மீது அன்பாக இருக்கவேண்டும் என்று சிடுமூஞ்சி என நீங்கள் நினைத்தவர் கூட , உங்களுக்கு காலை வணக்கம் சொல்லி கடந்து போவார்.


-ஸ்டார் வெங்கட். 


Comments