குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பி!!

     -MMH 


குடிபோதையில் இருந்த அண்ணனை கொலை செய்த தம்பி!!


     தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம்   வட்டம் தேவன்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன்கள் கார்த்திகேயன்(வயது 25), சுரேஷ்(24). இவர்களுக்கு  இருவரும் திருமணம் ஆகாதவர்கள், கார்த்திகேயன் தற்போது டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் மது குடித்துவிட்டு போதையில் வீட்டில் அருகில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.


நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் அக்கம் பக்கத்தினரிடம் கார்த்திகேயன் தகராறு செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த அவரது தம்பி சுரேஷ், ஏன் தினமும் குடித்து விட்டு வந்து அக்கம், பக்கத்தினரிடம் தகராறு செய்கிறாய்  என்று அண்ணனை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து சுரேசை வெட்டினார். அப்போது சுதாரித்துக்கொண்ட சுரேஷ், கார்த்திகேயன் கையில் இருந்த அரிவாளை பறித்து அவரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த சுரேசுக்கு பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார், குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை தம்பி வெட்டிக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-இராஜசேகரன், தஞ்சாவூர்.


Comments