அமெரிக்க தேர்தல்: 3வது முறையாக எம்.பி.,யான தமிழர்!!!

     -MMH


        இல்லினாய்ஸ்: அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவர் 3வது முறையாக மிகப்பெரிய வெற்றியை பெற்று எம்.பி.,யாக தேர்வானார்.


        அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றனர். இந்த தேர்தலில், 4 அமெரிக்க வாழ் இந்தியர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர். பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் செனட் உறுப்பினர்களாக ஜனநாயக கட்சியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமி பெரா, பிரமிளா ஜெயபால் மற்றும் ரோகண்ணா ஆகியோர் வெற்றிப்பெற்று எம்.பி.,யானார்கள். இதில், ராஜா கிருஷ்ணமூர்த்தி 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


       தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்தவரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, டில்லியில் பிறந்தவராவார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரஸ்டன் நெல்சன் என்பவரை தோற்கடித்துள்ளார். இல்லினாய்ஸ் மாகாணத்தில் போட்டியிட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி 70.9 சதவீத ஓட்டுகளை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இவரின் பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.


நாளையவரலாறு செய்திக்காக,


-முஹம்மதுஹனீப்,திருப்பூர்.


Comments