ஆன்லைனில் களரி போட்டி! 32 மாணவர்கள் பங்கேற்பு!

     -MMH


     மடத்துக்குளம்:ஆன்லைனில் தேசிய அளவிலான களரி போட்டி மடத்துக்குளம் பகுதியில் நடந்தது. இந்திய அளவில் 19 மாநிலங்கள் பங்கு பெறும் தேசிய அளவிலான 'ஆன்லைன்' களரி போட்டிகள் மடத்துக்குளம் பகுதியில் நடந்தது. தமிழகத்தின், சென்னை, கோவை, நாகர்கோவில், ஆகிய மூன்று பகுதிகளிலிருந்து 11 மாணவர்களும், மடத்துக்குளம் பகுதியில் 21 மாணவர்களும் சேர்த்து, மொத்தம் 32 பேர் பங்கேற்றனர்.


இதுகுறித்து தமிழ்நாடு களரி பைட் அசோசியேஷன் செயலாளர் ஆசான் வீரமணி கூறுகையில், ''தேசியஅளவிலான இந்தப் போட்டிகள் 12 ஆவது ஆண்டாக நடக்கிறது. மத்திய அமைச்சர் முரளிதரன் துவக்கி வைத்துள்ளார். முதன் முறையாக ஆன்லைன் வாயிலாக, மாணவர்கள் தங்கள்திறமையை வெளிப்படுத்துகின்றனர். கடந்த ஜனவரி மாதம் உடுமலையில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 21 மாணவர்கள், தற்போது தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளனர்.மூன்று நாட்கள் நடந்த போட்டியில், சுவடு முறை, மெய் பைட்டு, உருமி வீசல், சவுடிபொங்கல் ஆகிய நான்கு பிரிவுகளில், மாணவர்கள் தற்காப்பு முறையை வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மாணவரின் தனித்திறமை அடிப்படையில், பதக்கம், பாராட்டு மற்றும் அரசு உதவிகளை, மத்திய அரசு வழங்கும்".இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-முஹம்மது ஹனீப், திருப்பூர்.


Comments