விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-49!!

     -MMH


விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-49!!


    ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட், இஓஎஸ்-1 உள்ளிட்ட 10 செயற்கைக் கோள்களை, வெற்றிகரமாக விண்ணில் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியது.


ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 3 மணி 2 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்த நிலையில், 10 நிமிடங்கள் தாமதமாக 3 மணி 12 நிமிடங்களுக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது.


இந்த ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கை கோளும், 9 பன்னாட்டு செயற்கைகோள்களையும் மேலும் 'லிதுவேனியா' நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கை கோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கை கோள்களும் அடங்கும் இந்த செயற்கைக்கோள், எத்தகைய காலநிலையிலும் நில அமைப்புகளை முப்பரிமாணத்தில் துல்லியமாக படம்பிடிக்கும் திறன் பெற்றதாகும். இந்த ஆண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ராக்கெட், செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.


-அருண்குமார், கோவை மேற்கு.


Comments