சிவகங்கையில் மக்கள் குறை கேட்கும் முகாம்!! - கார்த்தி சிதம்பரம் துடங்கி வைத்தார்!!

     -MMH 


     சிங்கம்புணரி: நவ- 07
     சிவகங்கை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்கள் நேற்று மாலை 5 மணி அளவில் சிங்கம்புணரிக்கு வருகை தந்து பொதுமக்களின் கோரிக்கை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டார்


அவரிடம் பறம்புமலை உடைபடாமல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


அந்நிகழ்வில் பறம்பு மலை பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த கர்ணன், இளஞ்சென்னியன், செல்வராஜ், விஷ்ணு ராம் மற்றும் தோழர் சாந்தி ஆகியோர் மனுவை அளித்தனர். அவரும் மனுவை படித்து பார்த்து மேலும் விவரங்களை  நேரில் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதிகாரிகளிடம் பறம்பு மலையை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார்.


-ஃபாரூக்,சிவகங்கை. 


Comments