தேனியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்பாட்டம்!!
-MMH
தேனியில் நியாவிலைக்கடை பணியாளர்கள், ஆர்ப்பாட்டம்.நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் தேனியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.தேனி பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பொன். அமைதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சேதுராமன், நிா்வாக பொதுச் செயலா் சேதுராமலிங்கம், தேனி நகரத் தலைவா் பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு நுகா்பொருள் வாணிபக் கழக பணியாளா்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய வரையறைக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.பின்னா், கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ம. பல்லவி பல்தேவிடம் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஆசிக் தேனி.
Comments