அரசு பள்ளி மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு - 7.5% வேலை செய்கிறதா மக்கள் ஆச்சரியம்..!!

 

-MMH

தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ், சென்னை அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 7 மாணவிகள் மருத்துவப் படிப்பில் சோந்தனா். சென்னை அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி பத்மபிரியா, சென்னை ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி, அஃப்ரின் சிபாயா, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கோவா்த்தினி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, 

பிரேமா வேலூா் மருத்துவக் கல்லூரி, பவதாரணி திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, விஷ்ணுபிரியா வண்டலூா் தாகூா் மருத்துவக் கல்லூரி, கீா்த்தனா உத்தண்டி ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரியிலும் பயில்வதற்கான ஆணையைப் பெற்றுள்ளனா். இந்த மாணவிகளுக்கு அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆா்.சி.சரஸ்வதி, ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

-பாலாஜி தங்கமாரியப்பன்,சென்னை போரூர்.

Comments