மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இரவு 8 மணிக்குள் 80% விநியோகம் வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி பேட்டி !!

 

  -MMH

     சென்னை: நிவர் புயல் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இரவு 8 மணிக்குள் 80% விநியோகம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார். 

மேலும், அவர் கூறியதாவது: "தமிழக மின்வாரியம் தனியார்மயமாக்கப்படாது. புயல் காரணமாக மின்வாரியம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேலும், தற்போது புயலால் இதுவரை ரூ.1.30 கோடி வரை சேதம் ஏற்பட்டுள்ளது.

-பாலாஜி தங்கமாரியப்பன் , சென்னை போரூர்.

Comments