இரவு நேரங்களில் சிறுத்தை உலாவா..!!

     -MMH


     பொள்ளாச்சி வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள டோபி காலனி குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பன்றிக் குட்டியை அப்பகுதியில் உள்ள மளிகை கடை முன்பு சிறுத்தை தின்று கொண்டிருந்தது. இது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.இக்காட்சி சமூக வலைதளங்களில் பரவலானது இதனை கண்ட வால்பாறை மக்கள் அச்சமடைந்து உள்ளார்கள் மேலும் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் சிறுத்தை உலா வருவதாகவும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இது தங்கி இருக்கலாம் என மக்கள் கூறுகிறார்கள்.இதனால் புதிய பஸ் ஸ்டாண்டில் இரவு நேரங்களில் வெளியூரிலிருந்து வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்பது வால்பாறை மக்களின் கோரிக்கையாகும்.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments