அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் பெருமிதம்..வெற்றி உரை!!
-MMH
உலகமே எதிர்நோக்கியிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவு வெளிவந்துவிட்டது அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபராக ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக திருமதி கமலா ஹாரிஸ் அவர்களும் போட்டியிட்டனர், அமெரிக்க தேர்தலில் நேற்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் திருமதி கமலா ஹாரிஸ் மற்றும் அவருடைய கட்சியின் தலைவர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மன்னார்குடியை அடுத்த துளசேந்திரபுரம் கிராமத்தில் மக்கள் வெடி வெடித்தும் பட்டாசுகளை கொளுத்தியும் இனிப்பு வழங்கியும் அவரது வெற்றியை மகிழ்ச்சியுடன்கொண்டாடி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. திருமதி கமலா ஹாரிஸ் அவர்கள் தனது வெற்றி உரையில் கூறும் பொழுது "தனது தாயார் அமெரிக்காவில் இது போன்ற ஒரு வாய்ப்பு நிச்சயமாக வரும்" என்று நம்பியதாக கூறினார்.
அமெரிக்காவில் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் கூறினார். அவர் மேலும் அமெரிக்க மக்களுக்கும் தனது குடும்பத்தினருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி கமலா ஹாரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த சில தினங்களுக்கு முன்பு துளசேந்திரபுரம் கிராம மக்கள் கமலா ஹாரிஸ் துணைஅதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து பூஜை செய்து வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பிரார்த்தனை நல்ல பலனைத் தந்துள்ளது என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜசேகரன்,தஞ்சாவூர்.
Comments