தேனி கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்...!
-MMH
தேனியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜவுளி மற்றும் பொருள்கள் வாங்குவதற்கு வியாழக்கிழமை, கடைத் தெருக்களில் கரோனா தடுப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பெரியகுளம் சாலை, மதுரை சாலை, கம்பம் சாலை, இடமால் தெரு, பகவதியம்மன் கோயில் தெரு, சுப்பன்தெரு ஆகியவற்றில் ஜவுளிக் கடைகள், அலங்காரப் பொருள் விற்பனைக் கடைகள், வீட்டு உபயோகப் பொருள் கடை, செல்லிடப்பேசி மற்றும் எலெக்ட்ரானிக் பொருள் விற்பனைக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கடைத் தெருக்களில் கூட்டமாகச் சென்ற பொதுமக்களில் பெரும்பாலானோா் கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் அணிந்திருக்கவில்லை. பெரும்பாலான கடைகளில் கிருமி நாசினியைப் பயன்படுத்தி கைகழுவிச் செல்வதற்கான ஏற்பாடுகள் இல்லை.நேரு சிலை மும்முனைச் சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது.
காவல் துறையினா் கண்காணிப்புக் கோபுரம் அமைத்து சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். எடமால் தெரு, பகவதியம்மன் கோயில் தெரு, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேருந்து நிலையம் மற்றும் கடைத் தெருக்களில் சாதாரண உடையில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஆசிக்,தேனி.
Comments