கோவையில் அனுமதி பெறாமல் பட்டாசு விற்பனை! பட்டாசு,லாரி பறிமுதல்..!!

     -MMH


அனுமதி பெறாமல் பட்டாசு விற்பனை செய்து வந்த மண்டபத்திற்கு சீல் பட்டாசுகள் மற்றும் லாரி பறிமுதல்..!!


கோவையில் அனுமதி பெறாத பட்டாசு விற்பனை செய்த மண்டபத்திற்கு சீல் மற்றும் தபால் துறை பெயரிட்டு லாரியில் இருந்த பட்டாசு பண்டல்கள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டன.கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, கோயம்புத்தூர்,


‌வடக்கு,வட்டம்,உள்வட்டம்‌துடியலூர்‌கிராமம்,மேட்டுப்பாளையம்‌ பிரதான சாலை கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர்‌ அருகே சி.கே. திருமண மண்டபத்திற்கு அருகாமையிலேயே உயர்‌ அழுத்த மின்கோபுரம் உள்ளதால்‌, கோயம்புத்தூர்‌ மாவட்ட வருவாய்க்‌ அலுவலர்‌ அவர்களால்‌ இந்த இடத்தில்‌ பட்டாசுக் கடை நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்‌,


சட்டவிரோதமாக உரிமம்‌ இல்லாமல்‌ பட்டாசுக்கடை நடப்பதாகத் தகவல் வரப்பெற்றதையடுத்து, மாவட்ட ஆட்சியர்‌ அவர்களின் அறிவுரையின்‌ பேரில்‌ இன்று (12.11.2020) கோயம்‌புத்தூர் வருவாய்‌ கோட்டாட்சியர்‌ ப.சுரேஷ்‌ அவர்களால்‌ மண்டபம்‌ தணிக்கை செய்யப்பட்டு சீல்‌ வைக்கப்பட்டது.


மேலும்‌, இதே இடத்தில் இருந்த முறையான ஆவண நகல்கள்‌ இல்லாமலும்‌ DEPARTMENT OF POSTS – MINISTRY OF COMMUNICATION – Government of India என லாரி முன் சட்டவிரோதமாக ஒட்டிய வாகனத்தில்‌ பட்டாசுகளை ஏற்றி வந்த வாகனத்தையும்‌ பறிமுதல்‌ செய்து துடியலூர்‌ காவல்துறையினர்‌ மூலம்‌ வாகன உரிமையாளர்‌,


திருமண மண்டப உரிமையாளர்‌ மற்றும்‌ அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்‌ பட்டாசு வியாபாரம்‌ செய்த திரு.பாலசுப்ரமணியம்‌ ஆகியோர்‌ மீது நடவடிக்கை எடுக்கப் புகார்‌ கொடுக்கப்பட்டது.மேலும்‌, கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்‌ மூலமாகவும்‌, வாகன உரிமையாளர்‌ மீது நடவடிக்கை மேற்கொள்ளப் புகார்‌ அளிக்கப்பட்டுள்ளது.


-நம்ம ஒற்றன்.


Comments