தமிழக ஆளுநரை திரும்பப்பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

     -MMH


தமிழக ஆளுநரை திரும்பப்பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழர்களுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி  எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட தலைவர் ராஜா ஹிசேன் தலைமையில் ஆத்துப்பாலம்  அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநரை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டன. 


ஏழு தமிழர் விடுதலை தொடர்பான சட்டமன்ற தீர்மானம், அமைச்சரவை தீர்மானம் மீது ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறார். மேலும் தமிழக பல்கலைக் கழகங்களில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை மட்டும் துணைவேந்தர்களாக நியமிக்கும் பழக்கம் ஆளுநர் பன்வாரிலால் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆளுநரால் நியமிக்கப்பட்ட அண்ணாபல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.தமிழக அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநர் தலையீடு, ஆளுநரின் தன்னிச்சையான நியமனங்கள் போன்றவை தமிழகத்தில் நிலவும் இரட்டை நிர்வாகத்தை வெளிப்படையாக காட்டுவதாக குற்றம் சாட்டினர். முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநில அமைச்சரவையின் பரிந்துரைக்கு உள்நோக்கத்துடன் ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆளுநரின் நடவடிக்கை என்பது வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும்.


ஆனால் தற்போதைய தமிழக ஆளுநரின் நடவடிக்கை அதனை அப்பட்டமாக மீறுவதாக உள்ளது. 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு ஆணை பிறப்பித்த பின்பு , ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. தற்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரிகை விடுத்தனர்.


-சீனி போத்தனூர்.


Comments