அதிமுக நிர்வாக மாவட்டங்கள் பிரிப்பு! - பலிக்குமா திட்டம்...!

     -MMH 


அதிமுக நிர்வாக மாவட்டங்கள் பிரிப்பு! மண்டல பொறுப்பாளர்கள் நியமனம் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக அரசியல் கட்சிகள் தற்போது களப் பணிகளை தொடங்கி விட்டன சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மற்ற கட்சிகளைப் போல அதிமுகவும் தீவிர களப்பணியாற்ற தொடங்கிவிட்டது.



அதிமுக அதிக அதிகாரம் மிக்க வழிகாட்டு குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமைக்கப் பட்டது .அதனைத் தொடர்ந்து தற்போது தேர்தல் தயாரிப்பு பிரச்சாரக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 30 மண்டல பொறுப்பாளர்களும்  நியமிக்கப்பட்டு உள்ளனர் மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.


இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும்  இணை ஒருங்கிணைப்பாளரும் விடுத்துள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது ,  அதன்படி  தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உருவாக்கப்பட்டுள்ளது அதில் பொன்னையன் கே ஏ செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளனர் அதே போன்று தேர்தல் பிரச்சார குழு உருவாக்கப்பட்டுள்ளது.


தம்பிதுரை டாக்டர் வைகை செல்வன் உள்ளிட்டோர் இதில் உள்ளனர் மேலும் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் தஞ்சை திருச்சி பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு திரு  வைத்தியலிங்கம் M.P  நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு   அமைச்சர் திரு ஓ.எஸ் மணியன்.அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் திருவாரூர் மாவட்ட அமைச்சர் திரு காமராஜ் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-ராஜசேகரன் தஞ்சாவூர்.


Comments