வண்டி இருக்கு ஹெல்மெட்டை காணோம்!! - பதறும் வாகனம் ஓட்டி..!!

     -MMH


     கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியில் சாந்தி திரையரங்கு அருகில்  நிறுத்தி வைக்கக் கூடிய இருசக்கர வாகனங்களில் தங்களுடைய ஹெல்மெட்டை வைத்து விட்டு செல்கிறார்கள். இந்நிலையில் அந்த வண்டியில் இருக்கக்கூடிய ஹெல்மெட்டுகளை திருடும் கும்பல்  அதிக அளவில் காணப்படுகிறது.தன்னுடைய வண்டியை நிறுத்திவிட்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று வந்து பார்க்கும் பொழுது வண்டியில் இருந்த ஹெல்மெட்டை காணவில்லை என்று வாகன ஓட்டி ஒருவர் மன வருத்தத்துடன் தெரிவித்தார்.கலெக்டர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் இயங்கும்  பகுதிகளில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது மனதிற்கு வருத்தமளிக்கிறது.


இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறையும் முடிந்தவரை செயலாற்றி வருகிறார்கள். இது பண்டிகை காலங்களாக இருப்பதால் வாகன ஓட்டிகளும் மக்களும் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறையினர் வலியுறுத்தப்படுகிறது.


-ஈஷா,கோவை.


Comments