தலைவா வா என்ற போஸ்டர்..! அரசியல் கணக்கா.....!

     -MMH


தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற கேள்வி...? மக்கள் மத்தியில் மட்டுமின்றி அவர்களுடைய ரசிகர் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் இதுவரை கேள்வியாகவே இருந்து வருகிறது.இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயமாக வருவார் என்று ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில் இனி அவர் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்று இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர். அரசியலுக்கு நிச்சயம் நான் வருவேன் என்று ரஜினி தெரிவித்திருந்த நிலையில் இப்பொழுது ஏன் அரசியலில் இருந்து விலகி நிற்கிறார் என்ற கேள்வி அரசியல்  நடுநிலைவாதிகள் இடம் எழுகிறது.


இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் ஓட்டுனா ரஜினிகாந்துக்கு தான் முழக்கத்தோடு தத்தளிக்கும் தமிழகத்தை தலைமை ஏற்க வா தலைவா என்ற  போஸ்டர் ஆனைமலை பகுதியில்  அச்சிட்டு ஒன்றியம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments