சிவகங்கை அருகே டெங்கு பரவல்.! பீதியில் மக்கள்..!
-MMH
மருதிபட்டியில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு. டெங்கு பரவாமல் தடுக்க, சுகாதாரத்துறை அதிகாரிகள் மேலும் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம்:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம், மருதிபட்டியில் கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு டெங்கு பாதித்துள்ளது. மேலும் டெங்கு பரவாமல் தடுக்க கடந்த இரண்டு நாட்களாக மருதிப்பட்டியில் பல பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கைத்தெளிப்பான் மூலம் கொசு மருந்துகள் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கொசுப் புழுக்களை அழிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அக்கிராமத்தில் முகாமிட்டுள்ள பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தேங்கிக்கிடந்த பாலித்தீன் பைகளையும், அள்ளப்படாத குப்பைகளையும் அகற்றினர். அருகிலுள்ள பேரூராட்சி மற்றும் அனைத்து ஊரக பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. டெங்கு பாதித்த கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-பாரூக்,சிவகங்கை.
Comments