கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு!!

     -MMH 


கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு!!


     உடுமலை:உடுமலை அருகே, கிணற்றில் தவறி விழுந்த கன்றுகுட்டி பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டது. உடுமலை அருகேயுள்ள கொழுமம், ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர், ஜெயந்தி.45. அவரது விவசாய நிலத்தில் உள்ள, 70 அடி கிணற்றில், பசு மாட்டு கன்று தவறி விழுந்தது. தகவல் கிடைத்ததும், உடுமலை தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, கிணற்றுக்குள் இறங்கி, தண்ணீரில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கன்றுக்குட்டியை, கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-முஹம்மதுஹனீப்,திருப்பூர்.


Comments