பயன் இல்லாமல் இருக்கும் பொள்ளாச்சி புது ரோடு மின் விளக்குகள்..!!

  -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி புது ரோடு சாலையில் மின் விளக்குகள் எரியாமல் பழுதாகி உள்ளது. பிரதான சாலை ஆன இவ்வழியே பழனி,பல்லடம், திருப்பூர் செல்லும் முக்கிய வழி ஆகும். மின் விளக்குகள் நீண்ட நாட்கள் ஆகியும் எரியாமல் பயனற்று கிடக்கிறது நாம் காண முடிகிறது. வாகன ஓட்டிகள் இச்சாலையில் செல்லும்போது அருகில் உள்ள கடைகளில் மின்விளக்குகள் வெளிச்சத்தில் தான் செல்கின்றனர்.

இது போல கோவை சாலை,உடுமலை சாலை,பல்லடம் சாலைகளில் மின்விளக்குகள் இருந்தும் பயன் இல்லை என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments