சென்னையில் மழை! - கடும் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் அவதி!!

  -MMH

சென்னையில் நேற்று மாலை முதல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால், இன்று காலை நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'நிவர்' புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெல்ல ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. அலுவலகம் செல்வோர் சிரமத்துக்கு உள்ளாகினர்.

வழக்கமாக காலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளிலும், மழை காரணமாக நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில், அம்பத்தூர், கோயம்பேடு, போரூர்,  நெற்குன்றம்,  குன்றத்தூர் என சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக இன்று காலை மழை பெய்துள்ளது.

-பாலாஜி தங்கமாரியப்பன் , சென்னை போரூர்.

Comments