ஏற்றப்பட்டது பரணி தீபம்! திருவண்ணாமலைக்கு அரோகரா!

 

-MMH

பிரபஞ்சமெங்கும் பேரொளி பரவி உயிர்களை உய்விக்க திரு அண்ணாமலையார் திருத்தளத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது! மலையே சிவபெருமானாக வணங்கக்குடிய ஸ்தலம் தான் திருவண்ணாமலை. இங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷம்.

 இந்த திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான  திருக்கார்த்திகை தீப விழா இன்று நவம்பர் 29 (கார்த்திகை 14)  விடியற்காலை 4.00 மணிக்கு பரணி தீப உற்சவத்துடன் நடைபெறுகிறது. மதியம் அருள்மிகு சுப்ரமண்யர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் 

மாலை 6.00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள், அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் காட்சி, அருள்மிகு அண்ணாமலை ஜோதி தீப தரிசனம் இரவு அவரோகணம் (கொடியிறக்கம்) பின்பு இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவம் என்று தொடர்ந்து நடைபெறவுள்ளது.

முன்னதாக இன்று அதிகாலை பிரபஞ்சமெங்கும் பேரொளி பரவி உயிர்களை உய்விக்க திரு அண்ணாமலையார் திருத்தளத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

அண்ணாமலையாருக்கு அரோகரா!

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.

Comments