வெண்டைக்காயின் சாகுபடி அதிகம்! - ஆற்றில் கொட்டி அழித்துள்ள விவசாயிகள்!!

   -MMH

     வெண்டைக்காயின் சாகுபடி அதிகமாக இருந்ததால் லாரி லாரியாக ஆற்றில் கொட்டி விவசாயிகள் அழித்துள்ளனர் .

தேனி மாவட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி அதிக அளவு செய்யப்பட்டு வருகின்றது. வெண்டைக்காயின் விலை ஏற்றத்தாழ்வு இல்லாமல் எப்போதும் சராசரியாக இருப்பதனால் ஆர்வத்துடன் விவசாயிகள் வெண்டை சாகுபடியில் ஈடுபட்டனர். இந்த வருடம் அதிக பட்சமாக ஒரு கிலோ வெண்டைக்காய் 120 ரூபாய் வரை ஓணம் பண்டிகையை முன்னிட்டு விற்பனையானது. எனவே வெண்டைக் காயின் விலை தொடர்ந்து உயரும் என்று எண்ணிய விவசாயிகள் அதிக அளவு வெண்டைக்காய் சாகுபடி செய்ய தொடங்கினர்.

ஆனால் கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும் வெளி மாவட்டத்தில் உள்ளவர்களும் வெண்டைக்காய் வாங்குவதற்கு எந்த ஆர்வமும் காட்டவில்லை.

இதனால் காய்கறி ஏல மார்க்கெட்டில் விவசாயிகள் வெண்டைக்காயை குவித்து வைத்துள்ளனர். இந்த வருடம் அதிக அளவில் வெண்டைக்காய் விளைந்து இருப்பதாலும் வாங்குவதற்கு யாரும் வரவில்லை என்பதாலும் என்ன செய்வது என்று தெரியாமல் தேனியில் உள்ள வீரபாண்டி ஆற்றில் லாரி லாரியாக வெண்டைக்காயை கொட்டி அழித்து வருகின்றனர். வெண்டைக்காயின் விலை ஒரு ரூபாய்க்கும் கீழே இருப்பதால் விளைந்து நிற்கும் வெண்டைக்காயை விவசாயிகள் சிலர் பறிக்காமல் விட்டு விட்டனர்.

-ஸ்டார் வெங்கட்.

Comments