சளி, தொண்டை வலியை முற்றிலும் குணமாக்கும் ரசம்!!

  -MMH 

     எலும்பிச்சை இஞ்சி ரசம் செய்து, அதனை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால், சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த ரசம், உடல் வலியை போக்கி, சளி, தொண்டை வலியை முற்றிலும் குணமாக்கும்.

எலுமிச்சை இஞ்சி ரசம் தேவையான பொருட்கள்:

பிஞ்சு இஞ்சி – 25 கிராம்

பருப்பு வேகவைத்த தண்ணீர் – 2 டம்ளர்

பச்சை மிளகாய் – 1

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு

சர்க்கரை – ஒரு சிட்டிகை

எலுமிச்சைச் சாறு – அரைப் பழச் சாறு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையானவை:

நெய் – 2 டீஸ்பூன்

கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்

பொடித்த மிளகு – அரை டீஸ்பூன்

பெருங்காயம் – கால் டீஸ்பூன்

தக்காளி – 1

செய்முறை:

முதலில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் இஞ்சியின் தோலை நீக்கி துருவிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு நெய் விட்டு காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம், பொடித்த மிளகு, பெருங்காயம் ஆகியவற்றைப் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சித் துருவல், உப்பு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய், பருப்புத் தண்ணீர் என அனைத்தையும் சேர்க்கவும்.

இறுதியில் நுரைகட்டி வரும்போது, அதில் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து இறக்கவும். இந்த ரசத்தை கொதிக்கவிடக் கூடாது. இப்போது சத்தான எலுமிச்சை இஞ்சி ரசம் ரெடி.

-ஸ்டார் வெங்கட்.

Comments