முகம் வெள்ளையாக வேண்டுமா!! இதோ ஒரு டிப்ஸ்.....!

-MMH

பொதுவாக அனைவருக்குமே முகம் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கான ஒரு டிப்ஸை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

பீட்ரூட் ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – ஒன்று

ஊறவைத்த அரிசி – ஒரு ஸ்பூன்

கற்றாழை ஜெல் – இரண்டு ஸ்பூன்

எலுமிச்சை – அரை துண்டு

செய்முறை:

ஒரு சிறிய அளவில் உள்ள பீட்ரூட்டை எடுத்து, அதன் தோலை சீவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பின் அதனுடன் ஒரு ஸ்பூன் ஊற வைத்த அரிசி, கற்றாழை ஜெல் இரண்டு ஸ்பூன், எலுமிச்சை அரை துண்டு என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து எடுக்கவும்.

பின்னர் அரைத்த பேஸ்டை, முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்து, 10 முதல் 15 நிமிடங்கள் வரை கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை, வாரத்தில் ஒருமுறை பின்பற்றி வந்தால் பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துகள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றி, சருமத்தை இளமையுடனும், பொலிவுடனும் வைக்க உதவும். மேலும் முகம் வெள்ளையாக காணப்படும்.

-ஸ்டார் வெங்கட்.     

Comments