பஸ் - டேங்கர் லாரி விபத்து!! - காயமின்றி தப்பிய பயணிகள்!!

     -MMH

உடுமலை:உடுமலை அருகே, அரசு பஸ் மீது, 'காஸ்' டேங்கர் லாரி உரசி ஏற்பட்ட விபத்தில், லாரி டிரைவர் காயமடைந்தார்; பயணிகள் காயமின்றி தப்பினர்.மதுரையிலிருந்து கொச்சிக்கு, உடுமலை வழியாக, 'காஸ்' டேங்கர் லாரி நேற்று காலை சென்றுள்ளது. லாரியை, பாபநாசம் பகுதியை சேர்ந்த, சுந்தர், 26; ஓட்டி வந்துள்ளார்.

உடுமலை மின்மயானம் அருகே, லாரி சென்ற போது, டயர் பஞ்சராகி, கட்டுப்பாட்டை இழந்து, பொள்ளாச்சியிலிருந்து, உடுமலை நோக்கி வந்த, அரசு பஸ் மீது உரசியுள்ளது.இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காயமடைந்த லாரி டிரைவர் சுந்தரை, மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு, போலீசார் அனுப்பி வைத்தனர்.

காஸ்' டேங்கர் லாரி விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடுமலை தீயணைப்பு மீட்பு நிலையத்தினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 'டேங்கர்' லாரியில், லோடு இல்லாமல், காலியாக இருந்தது.இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக அரசு பஸ்சையும், லாரியையும் அப்புறப்படுத்தி, தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர்.

நாளையவரலாறு செய்திக்காக,

-ஹ.மு.முஹம்மதுஹனீப்,திருப்பூர்.

Comments