பொள்ளாச்சி நகராட்சியின் நூற்றாண்டுவிழாவை மறந்து விட்டார்களா..?

 

   -MMH

     தென் இந்தியாவில் புகழ்பெற்ற மாட்டுச்சந்தை, காந்தி வாரச்சந்தை மற்றும்  மினி கோடம்பாக்கம்,தென்னை நகரம் இவ்வளவு பெருமைகளை உள்ளடக்கிய பொள்ளாச்சியை 20.11.1920 ம் ஆண்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 20.11.2020 நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டிய நாள். நூற்றாண்டு விழாவை  கொண்டாடாமல் நகராட்சி நிர்வாகம் மறந்தது ஏன்..? என்ற கேள்வியோடு புறக்கணித்தது ஏன்..? என்ற கேள்வியும் பொள்ளாச்சி மக்களிடம் எழுகிறது  மக்களின் கேள்விக்கு பதில் சொல்லப்போவது யார் ..? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். இவர்களின் கேள்விகளுக்கு  பதில் கிடைக்குமா..? காலம் பதில் சொல்லும் காத்திருப்போம்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு. 

Comments