கேரளாவில் சமூக வலைதளங்களில் வாக்கு சேகரிப்பு!! - இளம் வயது பெண்களுக்கு முக்கியத்துவம்!!

     -MMH

கேரளாவில் அடுத்த மாதம் டிசம்பர் 8, 10, 14, ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக  உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.நோய்த்தொற்று பரவல் காரணமாக வாக்கு சேகரிக்க  கூட்டம் சேரக்கூடாது என்ற காரணத்தினால் சமூக வலைதளங்களில் வாக்கு சோகரிக்க தொடங்கிவிட்டனர்.

மேலும் போட்டியிடும் நபர்கள் உள்ளூர் மக்களை சுற்றிச்சுற்றி சிரித்த முகத்துடன் உலா வருகின்றனர்.இதனால் கேரளாவில் அரசியல் புதிய யுத்தியுடன்  பரபரப்பாக காணப்படுகிறது

இந்த நிலையில் பாஜக சார்பில் அதிக அளவிலான இளம் வயது பெண் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.இதனால் எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் உள்ளனர்.பாஜகவின் இந்த புதிய முயற்சி வெற்றி பெறும் என்றால் இனிவரும் தேர்தல்களில் இளம் வயது பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அனைத்து கட்சிகளும் கொடுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சுரேஷ்குமார்கோவை தெற்கு.

Comments