பெரியகும் தனியார் பெண்கள் கல்லூரியில் சுருள்பாசி வளர்ப்பு ஆய்வு..!

 

-MMH

பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் மருத்துவ குணமுள்ள சுருள்பாசி வளா்ப்ப்பு ஆய்வுகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முதல்வா் எஸ். சேசுராணி தலைமை வகித்து, சுருள் பாசி ஆய்வை தொடக்கி வைத்தாா். கல்லூரிச் செயலா் பி.ஜே. குயின்சிலிஜெயந்தி முன்னிலை வகித்தாா்.

விழாவில், கல்லூரி வளாகத்தில் தற்காலிக தொட்டி அமைக்கப்பட்டு, அதில் பாசி விதைகள் தூவப்பட்டது. இந்த பாசிகளின் மூலம் நச்சுத்தன்மையை நீக்கும் வழிமுறைகள், சத்து பற்றாக்குறை மற்றும் உணவுத் தேவைக்கு பயன்படுத்துவது குறித்து தொடா் ஆய்வுப்பணிகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விலங்கியல்துறை துணைப் பேராசிரியா் இருதய கலைசெல்வம் மற்றும் விலங்கியல்துறை பணியாளா்கள் செய்திருந்தனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக் தேனி.

Comments