நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணி: அதிகாரிகள், குழுவினர்கள் ஆய்வு!!

  -MMH 

     திருப்பூர்:திருப்பூர் - விஜயமங்கலம் ரோட்டில், ஒருங்கிணைந்த சாலை பராமரிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், திருப்பூர் வடக்கு உட்கோட்டத்தின் மூலம் 2019-20ம் ஆண்டு, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அவ்வகையில், விரிவாக்கம், சாலையை புதுப்பித்தல் மற்றும் செப்பனிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, 8.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, திருப்பூர் - விஜயமங்கலம், குன்னத்துார் - நடுப்பட்டி, கருணாம்பதி, அணைப்பாளையம் - கரட்டுப்பாளையம் உட்பட சாலைகளில் துரிதகதியில் பணிகள் நடக்கிறது. இப்பணிகளை, திருப்பூர் வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, அனைத்து சாலைப் பணிகளையும் தரமாக அமைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். உதவிகோட்டப் பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் சுகுமாரன் ஆகியோர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹ.மு முஹம்மதுஹனீப், திருப்பூர்.

Comments