நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வேளாண்துறையினர் அழைப்பு!!!!

     -MMH

உடுமலை:சிறப்பு பருவத்தில், நெல் சாகுபடி செய்துள்ள, விவசாயிகள், உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேளாண்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி அறிக்கை: குறிச்சிக்கோட்டை, பெரியவாளவாடி குறுவட்டார நெல் சாகுபடி பகுதிகளில், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.தற்போதைய சிறப்பு பருவத்தில், சாகுபடி செய்துள்ள நெல் பயிருக்கு, காப்பீடு செய்து கொள்ள வரும், 30ம் தேதி கடைசி நாளாகும். இத்திட்டத்தில், நெற்பயிரை காப்பீடு செய்தால், இயற்கை சீற்றத்தால், பயிர் மகசூலில், ஏற்படும் பாதிப்புக்கு, இழப்பீடு கிடைக்கும். ஒரு ஏக்கர் நெற்பயிரை காப்பீடு செய்ய, 507 ரூபாய்; வி.ஏ.ஓ.,வழங்கும் சிட்டா, பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் கார்டு நகல், நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தக நகல், போட்டோ 2 ஆகியவற்றுடன், பொது சேவை மையத்தை அணுகி, காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையவரலாறு செய்திக்காக,

-முஹம்மதுஹனீப்,திருப்பூர்.

Comments