வாழையில் வருவாய் ஈட்டும் விவசாயிகள்!!

   -MMH

உடுமலை: மங்கள நிகழ்ச்சிக்களுக்கான தோரண வாயில் அமைக்க, வாழை மரங்களை பிரத்யேகமாக பராமரித்து, உடுமலை பகுதி விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனர். உடுமலை சுற்றுப்பகுதியில், நீர் வளம் மிகுந்த பகுதியில், வாழை சாகுபடி, பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், இலை வாழைக்கென, தனி ரகத்தை பராமரிக்கின்றனர். அதே போல், முகூர்த்த சீசனை இலக்காக வைத்து, நகரின் அருகிலுள்ள வாழைத்தோட்டங்களில், மரங்கள் பராமரிப்பில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக, திருமண மண்டபங்கள் முன், தோரண வாயில் அமைக்க, தேவையான வாழை மரங்களை பராமரித்து, ஜோடி மரங்கள், 600 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'முகூர்த்த சீசனில், குலை தள்ளியுள்ள, வாழை மரங்களை, நகரப்பகுதிக்கு அருகில் இருப்பதால், முன்பு, நேரடியாக கொள்முதல் செய்து வந்தனர். தற்போது, இதிலும், இடைத்தரகர்கள் அதிகரித்து விட்டனர். எங்களிடம், 500 ரூபாய் வரை, வாழை மரங்களை கொள்முதல் செய்து, திருமண மண்டபங்களில், 2 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்கின்றனர்,' என்றனர்.

நாளையவரலாறு செய்திக்காக,

-மு.முஹம்மதுஹனீப், திருப்பூர்.

Comments