நோயால் பாதிக்கப்பட்ட சிவபுரிபட்டி ஊராட்சிச் செயலர் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணை!

 

  -MMH

    சிங்கம்புணரி: நவ-19. நோயால் பாதிக்கப்பட்ட  சிவபுரிபட்டி ஊராட்சிச் செயலர் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணை!

சிவகங்கை மாவட்டம்,  சிங்கம்புணரி வட்டம், சிவபுரிபட்டி ஊராட்சிச் செயலாளராக பணிபுரியும் வடிவேலன் அவர்கள் ஒரு வகையான நோயால் அவதிப்பட்டு கை கால்கள் இயங்க முடியாத நிலையில் இருந்ததால், ஊராட்சிச் செயலரின் குடும்பம் மிகவும் சிரமப்பட்டனர். 

எனவே,அவரது குடும்பத்தினர், சிவகங்கை மாவட்ட 1 வது வார்டு மாவட்டக் கவுன்சிலர் பொன்.மணிபாஸ்கரன் அவர்களிடம், ஊராட்சிச் செயலாளர் அவர்களால் செயல்பட இயலாத நிலையில், அவரது பணியிடத்தில் அவர்கள் குடும்பத்தினர் யாரையாவது முறையாக நியமனம் செய்தால் அவர்கள் குடும்பம் மீண்டு வரும் என கோரிக்கை வைத்தனர். உடனே பொன்.மணிபாஸ்கர் மற்றும் கதர்த்துறை மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் G.பாஸ்கரன் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின் பேரில் அந்த ஊராட்சி செயலரின் உடல்நிலை குறித்த அறிக்கை சிவகங்கை அரசு மருத்துவமனையில் பெறப்பட்டது.

இதன்பின்பு மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கை மூலம், நோயால் பாதிக்கப்பட்ட ஊராட்சி செயலரின் குடும்பத்தில் வேறு ஒருவருக்கு அவர் பார்த்து வந்த பணியை தொடர பணி நியமன ஆணை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

பொன்.மணிபாஸ்கரன் மனிதாபிமானமிக்கமுயற்சிக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல், சிவபுரிபட்டி ஊர் பொதுமக்களும் மாவட்டக்கவுன்சிலரின் சேவையை வெகுவாக பாராட்டியது குறிப்பிடதக்கது.

-ஃபாரூக்,சிவகங்கை.

Comments