பொள்ளாச்சி பேருந்து நிலையம் மின்விளக்கு எரியவில்லை!!

 

     -MMH                                                            

பொள்ளாச்சி அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள  மின் விளக்குகள் எரிவதில்லை.மக்கள் அவதி படுகின்றனர். ஐந்து விளக்குகள் உள்ள கம்பத்தில் இரண்டு விளக்குகள் மட்டும் எரிகின்றது நாம் காண முடிகிறது.பொள்ளாச்சி பேருந்து நிலையம் தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் மொத்தம் 3000 பேர் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் இப்படி இருப்பது பயணிகளுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை.இரவு நேரங்களில் வெளியூர் செல்லும் பயணிகள் வெளி மாநிலங்கள் செல்லும் பயணிகள் அதிகம் வரும் இந்த பேருந்து நிலையத்தில் இப்படி மின் விளக்குகள் இல்லாமல் இருப்பது பயணிகளுக்கு ஆபத்து. திருட்டு கொள்ளை போன்ற சம்பவங்கள் நிறைய நடக்க வாய்ப்புகள் உள்ளதாக மக்கள் கோவம் அடைகின்றனர்.அரசு மற்றும் நகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments