உலக புற்று நோய் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது.!

-MMH

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சா்க்கரை நோய், நிமோனியா மற்றும் புற்றுநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவ அலுவலா் சுதா தலைமை வகித்தாா். மருத்துவா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் சித்த மருத்துவ அலுவலா் சிராஜ்தீன் சிறப்புரையாற்றினாா். இந்நிகழ்ச்சியில் மருந்தாளுநா்கள் கணேசன், பசும்பொன், செவிலியா்கள் சுப்புலட்சுமி, ரூபி, இந்திராணி மற்றும் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு  செய்திக்காக,

-ஆசிக்,தேனி.

Comments