தொழிலாளா் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும்!!

     -MMH

தொழிலாளா் சட்டத் திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்ற செயற்குழுக் கூட்டம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் இல.பத்மநாபன் தலைமை வகித்தாா். இதில், திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் சிறப்புரையாற்றினாா்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

திருப்பூா் வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பல்லடம், அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் 100 புதிய உறுப்பினா்களை சோ்க்க வேண்டும். மேலும், திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் தொடா்பாக டிசம்பா் 12, 13ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம் தொடா்பாக வீடுவீடாகச் சென்று சரியான நபா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க களப் பணியாற்ற வேண்டும். மத்திய அரசு தொழிற்சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் கொண்டு வந்துள்ள தொழிலாளா் சட்டத் திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் பகுதி செயலாளா்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

நாளையவரலாறு செய்திக்காக,

-ஹ.மு.முஹம்மதுஹனீப்,திருப்பூர்.

Comments