நிவர் புயல் பற்றி இணைய தளங்களில் வைரல் ஆகிவரும் கவிதை!!

     -MMH 

நிவர் புயல் பற்றிய அடுக்கு மொழி கவிதை ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையமானது வலுவடைந்து நிவர் புயலாக மாறி கரையை கடந்துள்ளது. இந்த நிவர் புயல் உருவாகியதிலிருந்து மக்களிடையே பேசப்படும் ஒரு விவாத பொருளாகவே இது இருக்கிறது. இதைப்பற்றி பொதுமக்கள் பேசாத நேரமே கிடையாது என்று சொல்லலாம். புயல் காரணமாக மக்கள் எடுத்து வந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், இப்போதும் என்ன நடக்க போகிறது என்று வீட்டில் தொலைக்காட்சியின் முன் இருப்பதும் இயல்பாகவே இந்த சமயத்தில் மாறிவிட்டது.

பொதுவாக மழைக்காலங்களில் நெட்டிசன்கள் அதை பற்றி போடும் மீம்ஸ்களுக்கு பஞ்சமே இருக்காது.

இது போன்ற காலம் தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி கொடுப்பதாக அமையும் ஆனால். அது போல தற்போது நிவர் தொடர்பான மீம்ஸ்கள் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகின்றன. அந்த வகையில் நிவர் புயல் பற்றி அடுக்கு மொழி கவிதை ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த கவிதை இதோ:

"நிவர்-எங்கள் வீட்டில் இல்லை பவர்.


எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை டவர்.


நீ வருண பகவானால் வந்த ஷவர்.


உன்னுடைய வேகத்தால் வீழ்ந்துவிடும் பழைய சுவர்.


உன்னால் நனைந்தால் வந்துவிடும் பீவர்.


உன்னை பற்றிய நியூஸ் கேட்டால் வருகிறது பியர்.


உன்னால் எகிறுகிறது சுகர்.


உன்னால் சாலையிலேயே ஓடுகிறது ரிவர்.


உனக்கு இல்லை எவரும் நிகர்.


எங்களை காப்பது இனி எவர்?.


நீ வேகமாக இங்கிருந்து நகர்.


வராதே இங்கே நெவர்."


என்னும் இந்த கவிதை நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

-சுரேந்தர்.

Comments