செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு!! - முதல்வர் நேரில் ஆய்வு!!

 

     -MMH

வங்கக் கடலில் உருவான, ‘நிவர்’ புயல் தீவிர புயலாக மாறி இன்று கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் செம்‌பரம்‌பாக்கம்‌ ஏரிக்கு ஒரு வாரத்திற்குப்‌ பின் மீண்டும் நீர்வ‌ரத்து அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும். அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 22 அடியை விரைவில் எட்ட உள்ளது.

இந்நிலையில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது. செம்பரம்பாக்கத்தில் இருந்து 5 கண் மதகு வழியாக அடையாறு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி  அதை தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார் ,பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  பேசும் போது 13 மாவட்டங்களுக்கு நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார், காரைக்காலில் இருந்து சென்ற மீனவர்கள் திரும்பி வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் பேட்டியின் போது குறிப்பிட்டார்.

மேலும் அவர் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்  முழு வீச்சில்  புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்  என்று கூறினார்,

மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். 

நாளையவரலாறு செய்திக்காக,

-V.இராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments