சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது..!

 

-MMH 

22 அடியை நெருங்கியது  செம்பரம்பாக்கம் ஏரி. மொத்தம் கொள்ளளவு 24அடி. தீவிர புயலாக மாறிய நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகரில் கனமழை பெய்துவருகிறது, இதன் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது. முழு கொள்ளளவு 24 அடி கொண்ட சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியாக தற்போது அதிகரித்துள்ளது.

மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 230 கனஅடியில் இருந்து 1,096 கனஅடியாக அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்து அதிகரிக்கும் என்று சென்னை வானிலை அறிவித்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை விரைவில் எட்ட வாய்ப்பு உள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவை எட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரியில் அதிகளவு நீர் உள்ள நிலையில் பலத்த காற்றும் வீச தொடங்கியுள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் அலைகள் உருவாகியுள்ளது.

22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும் என கூறினார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேற்று செமபரம்பக்கம் ஏரியை ஆய்வு செய்த பின்னர் தெரிவித்தார். இதனால் இன்று செம்பரம்பாக்கம் ஏறி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-பாலாஜி தங்கமாரியப்பன்,சென்னை போரூர்.      


Comments