ஆஸ்திரேலியாவில் அதானியின் நிறுவனத்திற்கு எதிர்ப்பு!! கிரிக்கெட் மைதானத்திள் நுழைந்து ஆர்ப்பாட்டம்..!

-MMH

ஆஸ்திரேலியாவில் அதானியின் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாகையுடன் கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரரால் பரபரப்பு! ஆஸ்திரேலியா - இந்தியா முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது.

போட்டியின் போது, அங்கு நிலக்கரி சுரங்கம் நடத்தும் அதானி நிறுவனத்திற்கு எதிராக 2 பேர் மைதானத்திற்குள் நுழைந்து பதாகைகளைக் காட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரின் பதாகையில் அதானி குழுமத்திற்கு எதிராக 'NO $1BN ADANI LOAN' என்று எழுதப்பட்டிருந்தது. எதிர்ப்பாளர்களின் டி-ஷர்ட்டின் முன்புறம் “ஸ்டாப் அதானி” எழுதப்பட்டு இருந்தது. பின்புறம் “ஸ்டாப் நிலக்கரி” என்று இருந்ததது.

போராட்டக்காரர்களில் ஒருவர் மைதானத்திற்குள் ஊடுருவி பதாகையை ஏந்தியபடி ஆடுகளத்திற்கருகில் ஓடினார். இரு போராட்டக்காரர்களையும் பாதுகப்பு வீரர்கள் வெளியே அழைத்துச் சென்றனர்.

-பாரூக் சிவகங்கை.

Comments