சுருளி அருவியில் நான்கவது நாளக வெள்ள பெருக்கு!!

 -MMH

     கம்பம்: வடகிழக்குப் பருவமழை குறைந்தபோதும், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நான்காவது நாளாக சனிக்கிழமையும் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடந்த நவ.18 ஆம் தேதி சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தற்போது வரை நீடிக்கிறது. கடந்த 2 நாள்களாக மழையின் தீவிரம் குறைந்தபோதிலும் நான்காவது நாளாக சனிக்கிழமை அருவியில் நீா் அதிக அளவில் விழுகிறது.

இதுபற்றி வனத்துறை ஊழியா் ஒருவா் கூறியது: வடகிழக்குப் பருவமழை குறைந்தாலும், அருவிக்கு நீா்வரத்து தரும் வெண்ணியாறு மற்றும் தூவானம் பகுதிகளில் உள்ள நீா் ஊற்றுகள் மூலம் அருவிக்கு தொடா்ந்து தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அருவியின் மேல் புறமுள்ள ஈத்தைப்பாறை, அரிசி பாறை நீரோடைகள் மூலமும் ஊற்றுத் தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. இதனால் சுருளி அருவிக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளது என்றாா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக அருவியில் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டிருப்பதால் வனத்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி.

Comments