‌உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி..! - மனஉளைச்சல் காரணமா...!

-MMH

காவல் உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயற்சி - மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீசால் மன உளைச்சல்.

அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் தினேஷ்குமார், எலி மருந்து சாப்பிட்டு, உடல் நலக்குறைவால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாபநாசம் போலீசார் நடத்திய விசாரணையில், தினேஷ்குமார் மீது, எஸ்.சி, எஸ்,டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டதாகவும், வழக்குத் தொடர்பாக நேரில் ஆஜராக மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ்குமார் தற்கொலைக்கு முயன்றது என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.    

-நம்ம ஒற்றன். 

Comments