அடிக்கடி இருளில் மூழ்கும் சுந்தராபுரம் பகுதி..மின் ஊழியர்கள் அலட்சியம்..!!

 -MMH 

     அடிக்கடி இருளில் மூழ்கும் சுந்தராபுரம் பகுதி.. மக்கள் அவதி..மின் ஊழியர்கள் அலட்சியம்.. - 

     கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் மின் ஊழியர்கள் அலட்சியத்தால் அந்தப்பகுதி அடிக்கடி இருளில் மூழ்கி இருக்கிறது. கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் இரவில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மின் ஊழியர்களை கேட்டால் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் சரிவர பராமரிக்க முடிவதில்லை என்று குறை கூறுகிறார்கள். இந்த பாதிப்பினால் பொதுமக்கள் அவதி படுவதோடு வயதானவர்களும், நோயினால் பாதிக்கப் பட்டவர்களும் இந்த மின் துண்டிப்பு நாள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக ஒரு சில இடங்களில் மட்டும் இந்த பாதிப்பு ஏற்படும் பொழுது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், இந்தக் குறை நீடிக்குமானால் திருட்டு கொள்ளை சம்பவங்கள் மேலும் அசம்பாவிதம் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறது. 

இந்தப் பற்றாக்குறையை நாங்கள் சரி செய்ய முடியாது. அரசுதான் செய்ய வேண்டு மென்று அலட்சியப் போக்கில் மின் ஊழியர்கள் பதில் கூறுகின்றனர். இந்த மின் துண்டிப்பு சரி செய்கிறார்களோ இல்லையோ இதனால் ஏற்படும் பாதிப்பு குறைவதாக தெரியவில்லை. ஆகவே அந்த சுந்தராபுரம் மற்றும் முருகா நகர் பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

மின் ஊழியர்கள் பற்றாக்குறையை சரி செய்தால் இந்த அசம்பாவிதத்தை தவிர்க்கலாம். இதை அரசாங்கம் சரி செய்யுமா..?

-கிரி,கோவை மாவட்டம்.

Comments