விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச் சிக்கல் ?

   -MMH

    லண்டன்: விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் பல ரகசிய சட்ட சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதும் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஆனால் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரி தொடர்ந்து மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் பல ரகசிய சட்ட சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், எப்போது அவர் நாடு கடத்தப்படுவார் என்பது குறித்த காலக்கெடு எதுவும் தெரிவிக்கப்படவுமில்லை .

இது தொடர்பாக இங்கிலாந்து அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

-ஃபாரூக்,சிவகங்கை. 

Comments